உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஸ்ரீ ஈஸ்வர் கல்லுாரி மாணவருக்கு ஆசிய சிலம்பத்தில் இரு பதக்கம் 

ஸ்ரீ ஈஸ்வர் கல்லுாரி மாணவருக்கு ஆசிய சிலம்பத்தில் இரு பதக்கம் 

கோவை : கன்னியாகுமரியில் நடந்த ஆசிய அளவிலான சிலம்பப்போட்டியில், ஸ்ரீ ஈஸ்வர் கல்லுாரி மாணவர் இரண்டு பதக்கங்கள் வென்றார். அகில இந்திய சிலம்பாட்ட சம்மேளனம் சார்பில், 5வது ஆசிய சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி, கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய ஸ்டேடியத்தில் நடந்தது. இதில், குத்துவரிசை, அலங்கார வீச்சு, ஒற்றை கம்பு வச்ச, இரட்டை கம்பு வீச்சு, வேல்கம்பு வீச்சு, ஒற்றை சுருள் வாள், இரட்டை சுருள் வாள், ஆயுத ஜோடி, நேரடி சண்டை உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் நேபால் ஆகிய நாடுகளிலிருந்து 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இப்போட்டியில் கிணத்துக்கடவு ஸ்ரீ ஈஸ்வர் இன்ஜி., கல்லுாரி மாணவர் சுதாகர், இந்திய அணி சார்பில் பங்கேற்று, சுருள் வாள் வீச்சு போட்டியில் தங்கம் மற்றும் குழு ஆயுத வீச்சு போட்டியில் வெண்கலம் என, இரண்டு பதக்கங்கள் வென்று அசத்தினார். இதன் மூலம், சுதாகர் உலக சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளார்.பதக்கம் வென்ற மாணவரை, கல்லுாரி தலைவர் மோகன்ராம், இயக்குனர் ராஜாராம், முதல்வர் சுதா ஆகியோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி