உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பெண்ணிடம் நகை பறித்த வாலிபர்கள் இருவர் கைது

பெண்ணிடம் நகை பறித்த வாலிபர்கள் இருவர் கைது

கருமத்தம்பட்டி:கருமத்தம்பட்டி அருகே பெண்ணிடம் நகை பறித்த இருவரை போலீசார் கைது செய்தனர்.கருமத்தம்பட்டி அடுத்த வாகராயம்பாளையம் -- பாப்பம்பட்டி ரோட்டை சேர்ந்தவர் நாகரத்தினம். தனது வீட்டின் அருகே மளிகை கடை வைத்துள்ளார். கடந்த, 11ம் தேதி மதியம், பைக்கில் வந்த இருவர், பொருட்கள் கேட்டு கடைக்கு வந்துள்ளனர்.அப்போது, அப்பெண் அணிந்திருந்த இரண்டு சவரன் நகையை பறித்தனர். ஆவேசமடைந்த அப்பெண், குளிர்பான பாட்டிலால் அவர்களை தாக்கியுள்ளார். அதில், ஒரு நபரின் மொபைல் போன் கீழே விழுந்தது தெரியாமல் தப்பி சென்றனர். நாகரத்தினம் கருமத்தம்பட்டி போலீசில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், மொபைல் போன் வைத்து குற்றவாளிகளை தேடி கண்டுபிடித்தனர்.விசாரணையில், மதுரை மாவட்டத்தை சேர்ந்த சுந்தரபாண்டி, 26, ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த கவியரசு, 20 என்பது தெரிந்தது. நகையை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை