உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சாலையில் வீணாக செல்லும் குடிநீர்

சாலையில் வீணாக செல்லும் குடிநீர்

மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையம் மகாதேவபுரத்தில் குழாயில் கசிவு ஏற்பட்டு, சாலையில் குடிநீர வீணாக செல்கிறது.மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில், சாமன்னா வாட்டர் ஹவுஸ் பகுதியில் இருந்து திருப்பூர் மாவட்டத்திற்கு, திருப்பூர் மூன்றாவது குடிநீர் திட்டம் வாயிலாக குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. மேட்டுப்பாளையம் மகாதேவபுரத்தில் சாலைக்கு அடியில் இதற்கான குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. இந்த குழாயில் கடந்த சில நாட்களுக்கு முன் நீர் கசிவு ஏற்பட்டது. தற்போது இந்த கசிவு அதிகரித்து, சாலையின் மேல் பகுதியில் தண்ணீர் வருகிறது. இதனால் அப்பகுதியில் வாகனங்கள் விபத்தில் சிக்காமல் இருக்க சாலையின் நடுவே கற்கள் வைக்கப்பட்டுள்ளன. குடிநீர் பற்றாக்குறை நிலவி வரும் இச்சமயத்தில் பல லட்சம் லிட்டர் குடிநீர் சாலையில் வீணாக செல்கின்றன. மேலும் வாகன ஓட்டிகளுக்கும் சிரமம் ஏற்படுகின்றன. குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உடனடியாக இதனை சீரமைத்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை