உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கடந்த தேர்தலில் தந்த வாக்குறுதி என்னாச்சு?  அரசு ஓய்வூதியர் சங்கம் கேள்வி

கடந்த தேர்தலில் தந்த வாக்குறுதி என்னாச்சு?  அரசு ஓய்வூதியர் சங்கம் கேள்வி

கோவை : ஓய்வூதியர்களுக்கு கடந்த தேர்தலில் தந்த வாக்குறுதியை, இந்த தேர்தல் முடிந்த பிறகாவதும் நிறை வேற்ற வேண்டும். என, தி.மு.க.,வுக்கு, கோவை மாவட்ட ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து, கோவை மாவட்ட ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சங்க தலைவர் பலராமன் கூறியதாவது:லோக்சபா தேர்தலை முன்னிட்டு, தி.மு.க., வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.கடந்த சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க., வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், 70 வயதை கடந்த ஓய்வூதியர்களுக்கு, வாங்கும் ஓய்வூதியத்தில் 10 சதவீதம் அதிகரித்து வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டது. ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆகியும் கொடுக்கவில்லை. புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டம் அமுல்படுத்தப்படும் என, அறிவித்து இருந்தனர். அதுவும் நிறைவேற்றப்படவில்லை. இந்த தேர்தல் அறிக்கையில், ரயில் கட்டணங்களில் சலுகை அளிக்கப்படும் என அறிவித்துள்ளனர். ஏற்கனவே மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த, ரயில் கட்டண சலுகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கையில் கூறியதை தேர்தல் முடித்தவுடன் மறந்து விடாமல், படிப்படியாக நிறைவேற்ற வேண்டும்.ஓய்வூதியர்களுக்கு, கடந்த தேர்தலில் தந்த வாக்குறுதியை இந்த தேர்தல் முடித்த பிறகாவது, தி.மு.க., நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி