யார் தலையில் விழுமோ?
சரவணம்பட்டி, துடியலுார் ரோடு, ஆதித்யா திருமண மண்டபம் அருகே, நெட்வொர்க் போஸ்ட் ஆபத்தான நிலையில் சாய்ந்தபடிஉள்ளது. வாகன ஓட்டிகள், நடந்து செல்வோர் மீது விழுவதற்கு முன், கம்பத்தை சீரமைக்க வேண்டும்.- கார்த்திக், சரவணம்பட்டி. மின்விபத்து அபாயம்
கோவை மாநகராட்சி, 41வது வார்டு, கருப்பராயன் கோவிலில், உயர் கோபுர மின்கம்பத்தின் அடிப்பகுதி, திறந்தநிலையில் உள்ளது. ஒயர்கள் வெளியே நீட்டிக்கொண்டு, ஆபத்தான நிலையில் உள்ளன. குழந்தைகள் தெரியாமல் தொட வாய்ப்புள்ளது.- தமிழ்ரவி, கருப்பராயன் கோவில்வீதி. காத்திருக்கும் கழிவுகள்
போத்தனுார், போலீஸ் ஸ்டேஷன் எதிரே, எம்.ஜி.ஆர்., நகர், புதிய வீதி விரிவாக்கத்தில், சாக்கடை கால்வாய் துார்வாரிய பின், கழிவுகள் சாலையிலேயே விடப்பட்டுள்ளன. துர்நாற்றம் வீசுவதுடன், வாகனங்கள் செல்வதற்கும், இடையூறாக உள்ளது.- சத்யநாராயணன், போத்தனுார். அடிப்படை வசதிகளின்றி தவிப்பு
பேரூர், தாளியூர், கலிக்கநாயக்கன்பாளையம், சி.பி.சி., கார்டன், பேஸ் - 3 குடியிருப்பு பகுதியில், கடந்த இரண்டு ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் அமைக்க முறையிட்டும் நடவடிக்கையில்லை. குழாய் அமைத்த பின்னரும், தண்ணீர் விநியோகிக்கவில்லை. குடிநீர், தெருவிளக்கு மற்றும் சாலை வசதிகளின்றி மக்கள் தவிக்கின்றனர்.- சங்கர், பேரூர். சீரமைக்கப்படாத ரோடு
செல்வபுரம், 79வது வார்டு, முத்துசாமி காலனி, மூன்றாவது வீதியில், சூயஸ் குழாய் பதிப்புக்கு பின், சாலை சரியாக சீரமைக்கவில்லை. தார் ஊற்றாமல் வெறும் கல் மற்றும் மண்ணால் குழிகள் மூடப்பட்டுள்ளன. இப்பகுதியில், வீடுகளின் ரேம்புகளையும் சாலையை ஆக்கிரமித்து அமைத்துள்ளனர்.- பாலமுருகன், செல்வபுரம். சாலையில் பறக்கும் குப்பை
கோவையின் பல பகுதிகளில், குப்பை ஏற்றிச் செல்லும் லாரிகளின் மேல் தார்பாய் போட்டு மூடுவதில்லை. சுங்கம், உக்கடம் சாலையில் இப்படி தார்ப்பாய் போடாமல் சென்ற லாரியிலிருந்து, அதிக குப்பை காற்றில் பறந்தது. வாகனஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.- கணேசன், காந்திபுரம். கழிவுநீரால் துர்நாற்றம்
செல்வபுரம், தில்லை நகர், சரோஜினி நகர், மூன்றாவது தெருவில், சாக்கடை கால்வாய் சரிவர துார்வாரவில்லை. கால்வாயில் சாக்கடை நீர் நிரம்பி நிற்கிறது. பல வாரங்களாக தேங்கி நிற்கும் கழிவுநீரால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.- கோவிந்தன், தில்லை நகர். துரத்தும் நாய்கள்
ஆவாரம்பாளையம், ராமசாமி லே-அவுட் பகுதியில், பத்துக்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றித்திரிகின்றன. சாலையில் நடந்து செல்வோர், பைக்கில் செல்வோரைநாய்கள் துரத்தி அச்சுறுத்துகின்றன.- ராஜா, ஆவாரம்பாளையம். அடிக்கடி காய்ச்சல்
மதுக்கரை, 17வது வார்டு, மிலிட்டரி கேம்ப் எதிர்புறம், ஐந்தாவது வீதியில், சாக்கடை வசதியில்லை. இதனால், வீடுகளிலிருந்து திறந்தவெளியில் கழிவுநீர் விடப்படுகிறது. சுகாதாரமின்மையால் குழந்தைகளுக்கு அடிக்கடி காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறது.- சதீஷ், மதுக்கரை. குப்பை தேக்கம்
சாய்பாபாகாலனி, 62வது வார்டு, சிந்தாமணி நகர், வரிவசூல் மையம் அருகே அதிக குப்பை குவிந்துள்ளது. பல மாதங்களாக கிடக்கும் கழிவுகளால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. கழிவுகளைவிரைந்து அகற்றுவதுடன், மீண்டும் குப்பை கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ராஜ், சாய்பாகாலனி.