| ADDED : பிப் 17, 2024 02:03 AM
தொண்டாமுத்தூர்;தென்னமநல்லூரில், தோட்டங்களில் ஒயர் மற்றும் சொட்டுநீர் பாசன உபகரணங்கள் தொடர்ந்து திருட்டு போவது குறித்து, விவசாயிகள் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.தொண்டாமுத்தூர் சுற்றுப் பகுதியில் உள்ள தோட்டங்களில், மோட்டார் ஒயர்கள் மற்றும் சொட்டுநீர் பாசன உபகரணங்கள் திருட்டு போவது தொடர் கதையாகி வருகிறது. இதுதொடர்பான, விவசாயிகள் விழிப்புணர்வு கூட்டம், தென்னமநல்லூரில் நடந்தது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணை தலைவர் பெரியசாமி தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், திருட்டுக்கள் நடக்காமல் இருக்க கிராமங்கள் தோறும் சென்று, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். விவசாயிகள் குழுக்கள் அமைத்து இரவு நேரங்களில் கண்காணிக்க வேண்டும். போலீசார் இரவு நேர ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும். கலெக்டர் மற்றும் மாவட்ட எஸ்.பி.,யிடம் நேரில் புகார் அளிப்பது என முடிவு செய்யப்பட்டது.