| ADDED : ஜன 04, 2024 10:41 PM
மேட்டுப்பாளையம்:கோத்தகிரி மலையில் கார் கவிழ்ந்ததில், பெண் காயம் அடைந்தார்.நீலகிரி மாவட்டம், தும்மனட்டி அருகே உள்ள கப்பச்சியை சேர்ந்தவர் நடராஜ், 62. இவரது மனைவி ருக்மணி, 53, மகன் சந்தோஷ், 33. இவர்கள் மூவரும் நேற்று காலை கோவை செல்வதற்காக காரில் வந்து கொண்டிருந்தனர். காரை சந்தோஷ் ஓட்டி வந்தார்.குஞ்சப்பனையிலிருந்து, மேட்டுப்பாளையம் நோக்கி, கோத்தகிரி மலைப்பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, அதிக மேகமூட்டம் இருந்ததால், கார் நிலை தடுமாறி பத்தடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் ருக்மணிக்கு தலையில் காயம் ஏற்பட்டது. நடராஜ், சந்தோஷ் ஆகிய இருவருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில், ருக்மணி முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.