உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / யுகம் - 2024 கலாசார விளையாட்டு விழா

யுகம் - 2024 கலாசார விளையாட்டு விழா

குமரகுரு கல்வி நிறுவனங்களின் சார்பில், யுகம்-2024 கலாசார விளையாட்டு விழா, வரும் 21 முதல் 23ம் தேதி வரை நடக்கிறது. இந்நிகழ்ச்சி, முழுமையாக கல்லுாரி மாணவர்களால் ஏற்பாடு செய்யப்படுகிறது. இதில், 150 கல்லுாரிகளில் இருந்து, 20,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.கருத்தரங்கு, பயிலரங்கு, விளையாட்டு போட்டி, குறும்பட திரையிடல், அங்காடி, கலை நிகழ்வுகள், அறிவியல் சார்ந்த போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை, உள்ளடக்கியதாக விழா அமைய உள்ளது.யுகம் கலாசார நிகழ்வுகள் முன்பே துவங்கியுள்ள நிலையில், முக்கிய நிகழ்வுகள், 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடைபெறும் என, கல்லுாரி நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இந்நிகழ்வில், டீன் விஜிலேஷ், அசோசியேட் டீன் ஷீலா ஷீவத்சவா, மாணவர் மன்ற பிரதிநிதிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை