உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பார்த்தீனியம் செடிகளை கட்டுப்படுத்த வேளாண்துறை வலியுறுத்தல்

பார்த்தீனியம் செடிகளை கட்டுப்படுத்த வேளாண்துறை வலியுறுத்தல்

கடலூர்: மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய பார்த்தீனியம் செடிகளை கட்டுப்படுத்திட வேளாண்துறை வலியுறுத்தியுள்ளது. இது குறித்து வேளாண் இணை இயக்குனர் இளங்கோவன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: பார்த்தீனியம் செடி விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் தீங்கு விளைவிக்கக்கூடிய களைச் செடியாகும். இச்செடியானது ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடிய விஷமுள்ளதாகும். ஆஸ்துமா, தோல் நோய் மற்றும் சுவாசம் சம்மந்தமான நோய்களை மனிதனுக்கு ஏற்படுத்துகிறது. பார்த்தீனியம் செடிகள் பொதுவாக சாலை ஓரங்களிலும், புறம்போக்கு நிலங்களிலும், வீடுகளின் சுற்றுப்பகுதிகளிலும், ரயில் பாதை ஓரங்களிலும், ஆற்றின் கரையோரப் பகுதிகளிலும் அதிகமாக தென்படும். இக் களையின் தாக்கம் விளைநிலங்களிலும் பரவலாக காணப்பட்டு பயிர்களின் மகசூலையும் பாதிக்க கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இச்செடியினை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். அதிகமாகவும் மீண்டும் வளரும் இடங்களில் பார்த்தீனியம் செடிகளை உடனடியாக கட்டுப்பாடுத்திட களைக்கொல்லி பயன்படுத்தி கட்டுப்படுத்த வேண்டும். கால்நடைகளுக்கும், மனிதனுக்கும், பயிர்வளர்ச்சிக்கும் தீமை செய்யக்கூடிய பார்த்தீனிம் செடிகளை கட்டுப்படுத்திட வேளாண் துறை கேட்டுக்கொண்டுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி