உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வெள்ளாற்றில் தடுப்பணை மா.கம்யூ., வலியுறுத்தல்

வெள்ளாற்றில் தடுப்பணை மா.கம்யூ., வலியுறுத்தல்

புவனகிரி : வெள்ளாற்றில் கடல் உட்புகுவதை தடுக்க பு.முட்லூரில் தடுப்பணை கட்டிக்கொடுக்க மா.கம்யூ., முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளது. இதுகுறித்து சிதம்பரம் மா.கம்யூ., வட்டக்குழு உறுப்பினர் சதானந்தம் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு: சிதம்பரம் வட்டத்தில் வெள்ளாற்றில் கடல்நீர் உட்புகுவதால் மேல்புவனகிரி ஒன்றியத்திற்குட்பட்ட சி.முட்லூர், மேலமூங்கிலடி, தையாக்குப்பம், கான்சாகிப் மண்டபம், லால்புரம் ஆகிய பகுதிகளில் நிலத்தடி நீரில் உவர்ப்பு நீர் ஏற்பட்டு குடிநீர் உப்பு நீராக மாறியுள்ளது. இதனால் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. மேலும் விவசாயிகள் பம்பு செட்டில் வரும் நீரும் உவர் நீராக மாறியுள்ளது. குறைந்தபட்சம் 650 அடிக்கு மேல் ஆழ்துளை கிணறு அமைத்தால் தான் நல்ல குடிநீர் கிடைக்கும். இதனால் மேற்கண்ட கிராமங்களில் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே தாங்கள்தேர்தலின்போது புவனகிரியில் பேசியபடி, புவனகிரி அடுத்த பு.முட்லூர் வெள்ளாற்றில் உவர்ப்பு நீர் உட்புகுவதை தடுக்கும் வகையில் தடுப்பணை கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை