உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இரு தரப்பினர் மோதல்; பத்து பேர் மீது வழக்கு

இரு தரப்பினர் மோதல்; பத்து பேர் மீது வழக்கு

விருத்தாசலம் : விருத்தாசலம் வயலுாரைச் சேர்ந்தவர் சின்னேட்டு மகன் அய்யப்பன். இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த தமயந்தி என்பவருக்கும் இடையே இடப் பிரச்னை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது.இந்நிலையில்,நேற்றுமுன்தினம்பிரச்னைக்குரிய இடத்தை அளவீடு செய்ய நகராட்சி சர்வேயர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் சென்றனர்.அப்போது அய்யப்பன் தரப்பினருக்கும்,தமயந்தி தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் அசிங்கமாக திட்டி தாக்கிக்கொண்டனர்.இருதரப்பு புகாரின் பேரில், அய்யப்பன், அன்பழகன், மதியழகன்,கிருஷ்ணமூர்த்தி,சுப்ரமணியன், ராஜா, பரமன் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி