உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / என்.எல்.சி., சுரங்கத்தில் காப்பர் திருடிய 2 பேர் கைது

என்.எல்.சி., சுரங்கத்தில் காப்பர் திருடிய 2 பேர் கைது

நெய்வேலி : நெய்வேலியில், என்.எல்.சி., சுரங்கத்தில் 15.6 கிலோ காப்பர் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.நெய்வேலி என்.எல்.சி., முதல் சுரங்க விரிவாக்கம் எஸ்.எம்.டி., டிவிஷன் வளாகம் அருகே சந்தேகப்படும்படியாக சென்ற பொலீரோ காரை, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழிலக பாதுகாப்பு படை போலீசார் நிறுத்தி, வாகனத்தில் வந்த 2 பேரிடம் விசாரித்தனர். அதில் அவர்கள் இருவரும் நெய்வேலி அடுத்த தென்குத்து கிழக்கு தெருவைச் சேர்ந்த ராயப்பன் மகன் எடிசன், 25; வடக்கு சேப்ளாநத்தம், காமராஜர் நகர் வீரன் மகன் சுரேஷ், 37; என தெரியவந்தது. மேலும் அவர்கள், அந்த காரில் 15.6 கிலோ காப்பரை திருடிச் சென்றதும் தெரிந்தது.இதையடுத்து காப்பர் மற்றும் கார், திருட்டில் ஈடுபட்ட இருவரையும் டவுன்ஷிப் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.டவுன்ஷிப் போலீசார், காப்பர் திருடிய எடிசன், சுரேஷ் ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை