உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இருதரப்பு மோதல் 4 பேர் காயம்

இருதரப்பு மோதல் 4 பேர் காயம்

குள்ளஞ்சாவடி : குள்ளஞ்சாவடி அடுத்த கட்டியங்குப்பம், தெற்கு தெருவை சேர்ந்தவர், ராஜேந்திரன், 60. இவருக்கும் இவரது பங்காளியான தனசேகர் குடும்பத்திற்கும் இடையே பொது பாதை தொடர்பான முன்விரோதம் இருந்து வந்தது. இரு தினங்களுக்கு முன் தனசேகர் குடும்பத்தினர் சர்ச்சை உள்ள பாதையில் மூங்கில் போட்டு பாதையை அடைத்தனர். இதனை தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.ராஜேந்திரன் மனைவி இளவரசி, தனசேகர் குடும்பத்தினரிடம் பேசிய போது அவர்கள் ஆபாசமாக பேசி கட்டையால் அடித்துள்ளனர். இதில் இரு தரப்பிலும், 4 பேர் காயமடைந்தனர். சம்பவம் குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ