| ADDED : ஆக 18, 2024 04:46 AM
கடலுார் : கடலுாரில், பாரில் ஏற்பட்ட தகராறில், ரவுடியை கத்தியால் வெட்டிய கூட்டாளிகள் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.கடலுார் கம்மியம்பேட்டை ஜே.ஜே நகரை சேர்ந்தவர் முருகன் மகன் மூர்த்தி, 26; பிரபல ரவுடி. இவரது கூட்டாளிகள் அதே பகுதியை சேர்ந்த தேவன் மகன் ஸ்ரீபன்ராஜ்,29; குப்பன்குளம் சி.எம்.சி காலனி பன்னீர்செல்வம் மகன் சாமிநாதன்,35; திருப்பாதிரிப்புலியூர் இந்திரா நகர் சண்முகம் மகன் சூர்யா,29; மார்க்கெட் காலனி குப்பன் மகன் விஜய்குமார்,27; வண்டிப்பாளையம் சரவணா நகர் சந்திரன் மகன் ராஜேஷ்,29; இவர்கள் 6 பேரும் நேற்று முன்தினம் புதுச்சேரி மாநிலம் சோரியாங்குப்பத்தில் உள்ள பாரில் மதுபானம் அருந்தினர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு, மூர்த்தி மதுபானத்திற்கு பணம் கொடுக்காமல் வந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீபன்ராஜ், சாமிநாதன், விஜயகுமார், ராஜேஷ், சூர்யா ஆகியோர் கம்மியம்பேட்டைக்கு வந்து மூர்த்தியிடம் தகராறு செய்து அவரை கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.படுகாயடைந்த மூர்த்தி, கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளித்த பின், மேல்சிகிச்சைக்கு புதுச்சேரி ஜிப்மருக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில், திருப்பாதிரிபுலியூர் போலீசார் வழக்கு பதிந்து, ஸ்ரீபன்ராஜ் உள்ளிட்ட ஐந்து ரவுடிகளையம் கைது செய்தனர். இதில், தப்பியோடி பிரபல ரவுடி சாமிநாதன் கீழே விழுந்ததில் கை முறிவு ஏற்பட்டு, கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மாவு கட்டு போடப்பட்டுள்ளது.