உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கால்வாயில் விழுந்து துப்புரவு ஊழியர் சாவு 

கால்வாயில் விழுந்து துப்புரவு ஊழியர் சாவு 

கடலுார்: கடலுாரில் கழிவுநீர் கால்வாயில் துப்புரவு ஊழியர் தவறி விழுந்து இறந்தார்.கடலுார், வில்வநகரைச் சேர்ந்தவர் ராமு,49; கடலுார் மாநகராட்சி துப்பரவு ஊழியர். நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இதற்கிடையே, செம்மண்டலத்தில் கழிவுநீர் கால்வாயில் நேற்று ஆண் சடலம் கிடப்பதாக புதுநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டனர்.இது தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில் இறந்தவர் ராமு என்பதும், இவர் நடந்து செல்லும் போது, தவறி கால்வாயில் விழுந்து இறந்ததும்தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை