உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது

வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது

திட்டக்குடி:கடலுார் மாவட்டம், ராமநத்தம் அடுத்த வடகராம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி மகன் வீரமணி, 26. இவர், தன் வீட்டு தோட்டத்தில் கஞ்சா செடி வளர்ப்பதாக ராமநத்தம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ராமநத்தம், திட்டக்குடி போலீசார் நேற்று மாலை 3:00 மணியளவில் வீரமணி வீட்டிற்கு சென்று சோதனையிட்டதில், தோட்டத்தில் 6 அடி உயரமுள்ள மூன்று கஞ்சா செடிகள் வளர்க்கப்படுவதை உறுதி செய்தனர். அதையடுத்து, வீரமணி மீது ராமநத்தம் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர். கஞ்சா செடிகள் பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை