உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பணம் ஏற்றி சென்ற கன்டெய்னர் மீது போலீஸ் வேன் மோதி திடீர் விபத்து

பணம் ஏற்றி சென்ற கன்டெய்னர் மீது போலீஸ் வேன் மோதி திடீர் விபத்து

பாகூர்:காரைக்காலில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகளை ஏற்றிக் கொண்டு கன்டெய்னர் லாரி நேற்று காலை சென்னை ரிசர்வ் வங்கிக்கு புறப்பட்டது. கன்டெய்னர் முன்பும், பின்பும், போலீஸ் பாதுகாப்பு வாகனம் சென்றது. புதுச்சேரி - கடலுார் சாலையில் கிருமாம்பாக்கம் தனியார் பொறியியல் கல்லுாரி பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த தனியார் பஸ், திடீரென கன்டெய்னர் லாரியை முந்தி செல்ல முயன்றது. திடுக்கிட்ட கன்டெய்னர் டிரைவர், 'பிரேக்' அடித்தார். அப்போது, பின்னால் வந்த போலீஸ் பாதுகாப்பு வாகனம் 'டெம்போ டிராவலர்' எதிர்பாராத விதமாக, கன்டெய்னர் லாரியின் பின்னால் மோதியது. அதற்கு பின்னால் வந்த மற்றொரு கார், டெம்போ டிராவலர் வேனின் பின்னால் மோதியது. இந்த விபத்தில் டெம்போ டிராவலரில் பயணித்த காரைக்காலை சேர்ந்த சப் - இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார், காரில் வந்த மயிலாடுதுறையை சேர்ந்த ஒரு பெண்ணும் லேசான காயமடைந்தனர். கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் விரைந்து சென்று, விபத்தில் சிக்கிய வாகனங்களை மீட்டனர். கன்டெய்னர் லாரிக்கு பெரிய அளவில் சேதம் இல்லாததால் மீண்டும் புறப்பட்டு சென்றது. முதலுதவிக்கு பின், போலீசார், மாற்று வாகனத்தில் கன்டெய்னர் லாரியை பின் தொடர்ந்தனர். கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி