உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பாசன வாய்க்காலில் தடுப்பு கட்டை இல்லாததால் விபத்து

பாசன வாய்க்காலில் தடுப்பு கட்டை இல்லாததால் விபத்து

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு குறுக்குரோடு அருகே வாலாஜாஏரி பாசனத்திற்கான உடையூர் வாய்க்கால் மதகில் தடுப்பு கட்டை இல்லாததால் வாகனங்கள் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகும் அபாயம் உள்ளது.சென்னை-கும்பகோணம் சாலையில் பின்னலுாருக்கும் சேத்தியாத்தோப்பு குறுக்குரோட்டிற்கும் இடையில் வாலஜா ஏரியின் பாசனத்திற்கான உடையூர் வாய்க்கால் மதகு தடுப்பு கட்டை உடைந்து பல மாதங்கள் ஆகியுள்ளது. தடுப்பு கட்டை இல்லாததால் வாகனங்கள் வாய்க்காலில் கவிழ்ந்து விபத்திற்குள்ளாவது வாடிக்கையாக நடந்து வருகிறது. சாலை மிகவும் குறுகலாக உள்ளதாலும் ,இரவு நேரங்களில் வெளிச்சம் இல்லாததால் எதிரே வரும் வாகனங்களை கடக்கும்போது வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்து விபத்திற்குள்ளாகின்றனர். இரு சக்கர வாகன ஓட்டிகளும் இதே நிலை நீடிக்கிறது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடையூர் வாய்க்கால் மதகில் தடுப்பு கட்டையை புதியதாக கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை