உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிவக்கொழுந்து வெற்றி பெற வேண்டும் அ.தி.மு.க., மாஜி அமைச்சர் சம்பத்

சிவக்கொழுந்து வெற்றி பெற வேண்டும் அ.தி.மு.க., மாஜி அமைச்சர் சம்பத்

கடலுார்: கடலுார் தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்தை ஆதரித்து அண்ணாகிராமம் ஒன்றியத்தில் அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் சம்பத் பிரசாரம் செய்தார்.பண்ருட்டி சட்டசபை தொகுதிக்குட்பட்ட அண்ணாகிராமம், கண்டரக்கோட்டை, புலவனுார், குமாரமங்கலம், தட்டாம்பாளையம், மாளிகை மேடு, ஏரி பாளையம், எஸ்.கே.பாளையம், குச்சிப்பாளையம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் பிரசாரம் செய்தார்.அப்போது சம்பத் பேசுகையில், அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை தருவதாக ஸ்டாலின் கூறி ஓட்டு வாங்கினார். ஆனால், தரவில்லை. தி.மு.க., வின் தேர்தல் வாக்குறுதிகள் சரியாக நிறைவேற்றவில்லை. அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தாலிக்கு தங்கம், மானிய விலையில் பெண்களுக்கு மொபட் என பல திட்டங்களை தி.மு.க., அரசு ரத்து செய்து விட்டது.'நீட்' தேர்வை ரத்து செய்வோம் என்று கூறினார். ஏன் 'நீட்' தேர்வை ரத்து செய்யவில்லை என்று கேள்வி எழுப்ப வேண்டும். சிவக்கொழுந்துக்கு முரசு சின்னத்தில் ஓட்டளித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.அ.தி.மு.க., மாவட்ட பேரவை செயலாளர் கனகராஜ், ஒன்றிய செயலாளர்கள் ராமசாமி, நாகபூஷணம், தமிழ்ச்செல்வன், சிவா, அவைத் தலைவர் ராஜேந்திரன், தே.மு.தி.க., மாவட்ட அவைத் தலைவர் ராஜாராம், மாவட்ட பொருளாளர் ராஜ், ஒன்றிய செயலாளர் தென்னரசு, பஞ்சாயத்து தலைவர் ஆறுமுகம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை