உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அ.தி.மு.க., உறுப்பினர் அட்டை அருண்மொழிதேவன் வழங்கல்

அ.தி.மு.க., உறுப்பினர் அட்டை அருண்மொழிதேவன் வழங்கல்

விருத்தாசலம்: விருத்தாசலம் நகர அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டைகளை, அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., வழங்கினார்.விருத்தாசலம் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, அ.தி.மு.க., நகர செயலாளர் சந்திரகுமார் தலைமை தாங்கினார். தொகுதி பொறுப்பாளர் ரவிச்சந்திரன், மாநில வர்த்தக பிரிவு துணை செயலாளர் சக்திவேல், ஜெ., பேரவை மாநில துணை செயலாளர் அருளழகன், மண்டல செயலாளர் அருண், முன்னாள் பால்வள தலைவர் வெங்கடவேணு, நகர துணை செயலாளர் மணிவண்ணன், நகர தலைவர் தங்கராசு முன்னிலை வகித்தனர்.மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., நகராட்சியில் உள்ள 33 வார்டுகளின் நிர்வாகிகள், அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அ.தி.மு.க., உறுப்பினர் அட்டையை வழங்கினார். தொடர்ந்து, வரும் சட்டசபை தேர்தலில் பொதுச் செயலாளர் பழனிசாமி முதல்வராகும் வகையில் தேர்தல் பணியாற்றிட அறிவுறுத்தினார்.நிர்வாகிகள் முக்தார்அலி, மலர்கொடி உத்திராபதி, வளர்மதி கண்ணன், ஆண்டாள் கலிவரதன், கவுன்சிலர் பிரியா ஆனந்த், வட்ட செயலாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை