உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் அக்னி நட்சத்திரம் இன்று துவக்கம்

வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் அக்னி நட்சத்திரம் இன்று துவக்கம்

கடலுார் : கடந்த சில வாரங்களாக கொளுத்தி எடுக்கும் சாதாரண வெயிலையே தாக்குப் பிடிக்க முடியாமல் மக்கள் திணறி வரும் நிலையில், இன்று முதல் அக்னி நட்சத்திரம் துவங்குகிறது. . சூரிய வட்டப்பாதையில் சந்திரன், பூமி உள்ளிட்ட அத்தனை கிரகங்களும் பயணிக்கிறது. அந்த பயணத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாத கடைசி மற்றும் மே மாத ஆரம்பத்தில் பூமியும் சூரியனின் மிக அருகாமையில் பயணிக்கும்.அப்போதுதான் அந்த வெப்பம் அதிக அளவில் காணப்படுகிறது. சாதாரணமாகவே அக்னி நட்சத்திர நாட்களில் வெயில் மற்றும் வெக்கையின் தாக்கம் அதிகமாக இருக்கும், இதற்கு இடையில் காலநிலை மாற்றமும் சேர்ந்துள்ளதால் பூமி அனல் பந்துபோல் மாறி இருக்கிறது. நடப்பு ஆண்டு கத்தரி வெயில் 4ம் தேதி துவங்கி இம்மாதம் 28 ம் தேதி முடிகிறது. இதனால் இந்த வெப்பத்தைத் தாக்குப் பிடிக்க முடியாமல் மக்கள் அல்லாடி வருகின்றனர். இந்த ஆண்டு பருவமழை இயல்பை விட சற்று குறைவாக பெய்தது. இதனால் ஏரி குளங்களில் தேங்கிய தண்ணீர் எல்லாம் படிப்படியாக குறைந்து வற்றி விட்டது. மார்ச் மாத ஆரம்பத்தில் இருந்தே கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்தது. ஏப்ரல் மாதம் முதல் வெயில் படிப்படியாக அதிகரித்தது.வழக்கத்தை விட இந்த ஆண்டு வெப்பம் கூடுதலாக இருக்கும் என வானிலை ஆய்வு எச்சரிக்கை விடுத்துள்ளது. கத்தரி காலத்தில் எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது. நீர் மோர், சர்பத் போன்ற கடைகளில் கூட்டம் அதிகரிக்கும். கத்திரி வெயில் காலத்தில் வெளியே தலைகாட்ட முடியாத அளவிற்கு சூரியனின் கதிர்கள் சுட்டெரிக்கும். குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை புழுக்கத்தினால் அவதிப்பட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை