உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அக்னி வெயில் துவங்கியது தகிக்குது கடலுார் மாவட்டம்

அக்னி வெயில் துவங்கியது தகிக்குது கடலுார் மாவட்டம்

கடலுார், : அக்னி வெயில் துவங்கிய நாளிலேயே சுட்டெரிக்கும் வெயிலால் கடலுார் மாவட்டம் வெப்பத்தில் தகித்தது.தமிழகத்தில் அக்னி வெயில் நேற்று முதல் துவங்கியது. இதற்கு முன்பே 100 டிகிரிக்கு மேல் பதிவாகி வந்த நிலையில் கடந்த 3 நாட்களாக கடலுார் மாவட்டத்தில் தரைக்காற்று வீசி வருகிறது.அக்னி வெயில் துவங்கிய முதல் நாளான நேற்று காலை 9:00 மணி முதல் கடுமையான வெயில் தாக்கம் இருந்தது. மாவட்டத்தில், கடலுாரில் 101.5 டிகிரி, திட்டக்குடி, வேப்பூர் 108 டிகிரி, பண்ருட்டி, விருத்தாசலம் தொழுதுார் 107 டிகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் 103 டிகிரி பதிவானது.இதன் காரணமாக மக்கள் வீட்டில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வெயில் தாக்கத்தால் தண்ணீர் தாகம், தலைவலி, கண் இருட்டுதல், மயக்கம் போன்றவை ஏற்படுகிறது. இது போன்ற அறிகுறிகள் அதிகமாகி முதியவர்களுக்கு ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டு இறக்க நேரிடும். அதனால், நன்பகல் நேரங்களில் அவசியமின்றி வெளியே வரவேண்டாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம், வாகனங்கள் அதிகளவில் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. வெப்ப தாக்கம் தாங்க முடியாமல் வாகனங்களில் செல்வோர் தொப்பி அணிந்தம், துணியை தலையில் போர்த்தியவாறும், ஹெல்மெட் அணிந்தும் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை