உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி ராமநத்தம் அருகே பரபரப்பு

பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி ராமநத்தம் அருகே பரபரப்பு

திட்டக்குடி : ராமநத்தம் அடுத்த தொழுதுாரில் மொபட்டில் சென்ற இளம்பெண்ணின் செயினை பறிக்க முயன்ற மர்ம ஆசாமிகளால் பரபரப்பு ஏற்பட்டது.கடலுார் மாவட்டம், ராமநத்தம் அடுத்த தொழுதுார் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் மனைவி மோனாலிசா,28. தபால்துறையில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிகிறார். நேற்று காலை 9.30மணியளவில் தொழுதுாரிலிருந்து, வைத்தியநாதபுரம் நோக்கி தனது மொபட்டில் சென்றார். அப்போது பல்சர் பைக்கில் பின்தொடர்ந்து வந்த மர்மநபர்கள் இரண்டு பேர், மோனாலிசா கழுத்திலிருந்த தங்க செயினை பறிக்க முயன்றனர்.மோனாலிசா செயினை கெட்டியாக பிடித்துக்கொண்டு கூச்சலிட்டார். உடன் அருகிலிருந்தவர்கள் ஓடிவரவே, மர்ம ஆசாமிகள் பைக்கை அங்கேயே போட்டுவிட்டு தப்பி ஓடினர்.தகவலறிந்த ராமநத்தம் போலீசார் நேரில் சென்று, மர்ம ஆசாமிகள் விட்டுச்சென்ற பைக்கை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை