உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வள்ளலார் குருகுலம் பள்ளியில் போதை எதிர்ப்பு விழிப்புணர்வு

வள்ளலார் குருகுலம் பள்ளியில் போதை எதிர்ப்பு விழிப்புணர்வு

கடலுார்: வடலுார் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளியில், போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.பள்ளி தாளாளர் டாக்டர் செல்வராஜ் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். தலைமை ஆசிரியை பூர்ணிமா தேவி வரவேற்றார். வடலுார் இன்ஸ்பெக்டர் உதயகுமார் கலந்து கொண்டு, மாணவர்கள் போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து அறிவுரை வழங்கினார்.சப் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், போதைப்பொருள் விழிப்புணர்வு உறுதிமொழி வாசிக்க, மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் அறிவழகன், வெங்கடேசன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை உதவி தலைமை ஆசிரியர் வேலவன் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.ஆசிரியர் பழனிவேல் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை