உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அவுலியா தர்கா கந்துாரி உரூஸ் சந்தனகூடு பண்டிகை 

அவுலியா தர்கா கந்துாரி உரூஸ் சந்தனகூடு பண்டிகை 

பண்ருட்டி: பண்ருட்டியில் ஹஜரத் நுார்முகம்மது அவுலியா தர்கா கந்துாரி உரூஸ் சந்தன கூடு பண்டிகை நடந்தது.பண்ருட்டி ஹஜரத் நுார்முகம்மது அவுலியா தர்கா கந்துாரி உரூஸ் பண்டிகையொட்டி, கடந்த 31ம் தேதி பான்வாஜமா பக்கீர் மற்றும் ரீப்பாய் ஜமாக்கள் தர்காவிற்கு வருகை புரிதல், கடந்த 1ம் தேதி இரவு கொடி ஊர்வலம் நடந்தது. 2ம் தேதி மவுலுாத் ஷரீப் ஒதி சீரணி வழங்குதல் நடந்தது. நேற்று முன்தினம் மாலை அவுலியா அவர்களின் ரவுலா ஷரீப் பீடத்தில் பூவணி போர்வையால் அலங்கரித்து நள்ளிரவு 12:00 மணிக்கு மேல் சந்தன கூடு முக்கிய பகுதியில் வீதியுலா வருதல் நடந்தது. விழாவில் ஜெ.பி.ஆர். ஸ்டீல் அதிபர் ஜாகிர் உசேன், அவுலியா நகர் ஜமாத் தலைவர் சுல்தான், வக்பு சரக கண்காணிப்பாளர் சபியுல்லா, கவுன்சிலர் முகமதுஹனிபா உள்ளிட்ட ஆயிரக்கனக்கான முஸ்லீம்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை தர்கா நிர்வாக கமிட்டி தலைவர் சித்திக்பாஷா, தர்கா டிரஸ்டி அப்துல்கலாம் ஆசாத், நிர்வாக குழு உறுப்பினர்கள் முகமதுகாசிம், ஜாகிர்உசேன், ஜூபைர் அலி, மற்றும் ஜமாத் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை