உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பரதநாட்டிய அரங்கேற்றம் அய்யப்பன் எம்.எல்.ஏ., பங்கேற்பு

பரதநாட்டிய அரங்கேற்றம் அய்யப்பன் எம்.எல்.ஏ., பங்கேற்பு

கடலுார் : கடலுார், திருப்பாதிரிப்புலியூரில் சிவதாண்டவ நாட்டியாலயா பள்ளி மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம் மற்றும் சலங்கை பூஜை விழா நடந்தது.அய்யப்பன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, பரதநாட்டிய அரங்கேற்றத்தை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். நாட்டியப் பள்ளி இயக்குனர் ஞானசேகரன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக மா.கம்யூ., மாவட்ட செயலாளர் மாதவன், இமாகுலேட் மகளிர் கல்லுாரி முதல்வர் சுசிலாதேவி கலந்து கொண்டனர். பரதநாட்டியம் ஆடிய மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.விழாவில், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், சன் பிரைட் பிரகாஷ், முருகன், அருண், சதீஷ் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை