உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பைக்குகள் மோதல் விவசாயி பலி

பைக்குகள் மோதல் விவசாயி பலி

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் அருகே மூன்று பைக்குகள் மோதி கொண்டதில் விவசாயி உயிரிழந்தார், பெண் உட்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.பண்ருட்டி அடுத்த பலாப்பட்டை சேர்ந்தவர் சேகர், 50; விவசாயி. இவர், நேற்று கடலூரில் உள்ள உறவினரை பார்க்க பைக்கில் சென்றார். நெல்லிக்குப்பம் அடுத்த விஸ்வநாதபுரம் அருகே கஸ்டம்ஸ் சாலையில் சென்றபோது, எதிரே வேகமாக போட்டி போட்டு வந்த இரண்டு பைக்குகள் சேகர் பைக் மீது மோதியது. இதில் சேகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற இரண்டு பைக்குகளில் வந்த பண்ருட்டி அடுத்த ஏ.பி.குப்பத்தை சேர்ந்த ராமதாஸ், 46, கண்பர்லால்,40, கோழிப்பாக்கத்தை சேர்ந்த பிரபாவதி,30, சின்ன பகண்டையை சேர்ந்த வேலழகன்,36 ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்கள், கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.விபத்து குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை