உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பாசனத்திற்கு தண்ணீர் நிறுத்தியதால் என்.எல்.சி., சுரங்கம் முற்றுகை

பாசனத்திற்கு தண்ணீர் நிறுத்தியதால் என்.எல்.சி., சுரங்கம் முற்றுகை

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த மதுவானைமேடு, துறிஞ்சிக்கொல்லை விவசாய பாசனத்திற்கு சென்ற தண்ணீரை என்.எல்.சி., நிர்வாகம் திடிரென நிறுத்தியதை கண்டித்து, விவசாயிகள் சுரங்கம் அருகே முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.சேத்தியாத்தோப்பு அருகே கரிவெட்டியில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்ட பகுதியில் நெய்வேலி என்.எல்.சி., நிறுவனம் கடந்து இரண்டு ஆண்டுகளாக சுரங்கம் தோண்டி கரி வெட்டி எடுத்து வருகிறது. சுரங்கத்திலிருந்து உபரி நீரை பம்ப் செய்து மதுவானைமேடு, துறிஞ்சிக்கொல்லை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசனம் பெற்று வருகிறது.கடந்த 10 நாட்களாக சுரங்கத்திலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டதால் குறுவை சாகுபடி நடவு நெற்பயிர்கள் காய்ந்து வருகிறது. நெற்பயிர்கள் காய்ந்து வருவதைக்கண்டு ஆத்திர மடைந்த மதுவானை மேடு, துறிஞ்சிக்கொல்லை விவசாயிகள் நேற்று காலை 10.00 மணியளவில் திரண்டு, திடீரென சுரங்கத்தை முற்றுகையிட்டு விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடக்கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.தகவலறிந்த சேத்தியாத்தோப்பு டி.எஸ்.பி., ரூபன்குமார், இன்பெக்டர் சேதுபதி, சப் இன்ஸ்பெக்டர் வாசுதேவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.தடையில்லாமல் விவசாய பாசனத்திற்கு தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனர்.அதனை தொடர்ந்து 11.20 மணியளவில் விவசாயிகள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !