உள்ளூர் செய்திகள்

ரத்த தானம்

கடலுார்: சுதந்திர தினத்தையொட்டி கடலுார் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் ரத்ததான முகாம் மஞ்சக்குப்பத்தில் நடந்தது.மாவட்ட செயலாளர் மன்சூர் தலைமை தாங்கினார். பொருளாளர் ரியாஸ் ரகுமான் வரவேற்றார். மேயர் சுந்தரிராஜா முகாமை துவக்கி வைத்தார். முகாமில் 22 யூனிட் ரத்தம் தானமாக கடலுார் மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவ அதிகாரி கவிதா, ரத்த வங்கி அலுவலர் குமார் ஆகியோரிடம் வழங்கினர். நிர்வாகிகள் மாநில செயலாளர் இப்ராகிம், அஜீஸ்கான், நுார்முகமது, மன்சூர், அப்துல்லா, சையது அலி, பாபர்ஒளி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி