உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பஸ் கண்ணாடி உடைப்பு; இருவருக்கு வலை

பஸ் கண்ணாடி உடைப்பு; இருவருக்கு வலை

புவனகிரி : புவனகிரி அருகே அரசு பஸ் கண்ணாடி உடைத்த இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.சிதம்பரத்தில் இருந்து குறிஞ்சிப்பாடிக்கு நேற்று முன்தினம் இரவு அரசு பஸ் சென்றது. காட்டுமன்னார்கோவில் நந்திமங்கலம் ராஜசேகரன்,53; டிரைவராகவும், கீரப்பாளையம் அடுத்த தெற்குவிருந்தாங்கனை சேர்ந்த நம்பிராஜன் கண்டெக்டராகவும் இருந்தனர்.இரவு 9:00 மணியளவில், புவனகிரி அடுத்த வடக்குத்திட்டை என்ற இடத்தில் பஸ் சென்றபோது, பஸ்சை பின்தொடர்ந்து பைக்கில் வந்த இருவர், பஸ்சை வழிமறித்து கண்ணாடியை உடைத்தனர். தட்டி கேட்ட டிரைவர் கண்டக்டரை மிரட்டிவிட்டு தப்பி சென்றனர்.இதுகுறித்து டிரைவர் ராஜசேகரன் கொடுத்த புகாரில், புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து, பஸ் கண்ணாடி உடைத்த இருவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ