உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கொலை மிரட்டல் 4 பேர் மீது வழக்கு

கொலை மிரட்டல் 4 பேர் மீது வழக்கு

நடுவீரப்பட்டு: பண்ருட்டி அருகே நிலத்தில் பயிர் வைத்தது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.பண்ருட்டி அடுத்த புலவனுார் மாரியம்மன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் தண்டபாணி, 55; இவருக்கு சொந்தமான நிலத்தின் ஒரு பகுதியை அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன்கள் முருகன், 42; துளசி, 40; வெங்கடேசன், 38; தனசேகர், 36; ஆகியோர் அத்துமீறி ஏர் ஓட்டி பயிர் வைத்தனர்.இதை தண்டபாணி அதே பகுதியை சேர்ந்த இளங்கோ என்பவரிடம் முறையிட்டார். இதை அறிந்த கிருஷ்ணன் மகன்கள் தண்டபாணியை ஆபாசமாக திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.இதில், காயமடைந்த தண்டபாணி பண்ருட்டி அரசுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.இதுகுறித்த புகாரின் பேரில், முருகன் உட்பட 4 பேர் மீது பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை