உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு

கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு

குள்ளஞ்சாவடி : ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்தவர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்குள்ளஞ்சாவடி அடுத்த புலியூர் காலனியை சேர்ந்தவர், சர்க்கரை மகன், ஐயப்பன், 38. நேற்று முன்தினம் இவர் தனது வீட்டின் முன்பு நின்றபோது, அதே பகுதியை சேர்ந்த வைத்தியநாதன் என்பவர் ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். முன்விரோதம் காரணமாக தனக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது, ஐயப்பன் குள்ளஞ்சாவடி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ