உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / முதல்வர் திட்ட முகாம்:எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

முதல்வர் திட்ட முகாம்:எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

நெய்வேலி: நெய்வேலி அடுத்துள்ள சத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் துவக்க விழா நடந்தது.சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., தொடங்கி வைத்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார். வெங்கடாம்பேட்டை, புலியூர், அன்னதானம்பேட்டை, கோரணப்பட்டு, மதனகோபாலபுரம், சமுட்டிகுப்பம் ஆகிய ஊராட்சியில் உள்ள பொதுமக்களிடமிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது. மனுக்கள் இணையதளம் வாயிலாக பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கப்பட்டது.முகாமில் டி.எஸ்.ஓ., ராஜு, குறிஞ்சிப்பாடி பி.டி.ஓ., ராமச்சந்திரன், வெங்கடேசன், தாசில்தார் அசோகன் , ஊராட்சி தலைவர் செஞ்சிவேல், தி.மு.க., நிர்வாகிகள் குணசேகரன், கோவிந்தராஜ் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை