உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மக்களுடன் முதல்வர் முகாம்

மக்களுடன் முதல்வர் முகாம்

புவனகிரி: புவனகிரி அடுத்த அழிச்சிக்குடி வண்டுவராயன்பட்டு அரசு ஆதிதிராவிடர் மேல் நிலைப்பள்ளியில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடந்தது.ஊராட்சி தலைவர் அமிர்தவள்ளி, தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் ஜெய்சங்கர் வரவேற்றார். ஊராட்சி தலைவர்கள் சித்ரா, சுகுணாதேவி, லட்சுமி ராஜேஸ்வரி, மதியழகன், பி.டி.ஓ.,க்கள் புனிதா, பழனிசாமிநாதன், ஆத்மா திட்ட இயக்குனர் சாரங்கபாணி முன்னிலை வகித்தனர்.மாவட்ட உதவி இயக்குனர் பஞ்சாபிகேசவன், தாசில்தார் தனபதி முகாமை துவக்கி வைத்து, பொது மக்களிடம் 15 துறைகள் தொடர்பான மனுக்களை பெற்றனர்.முகாமில் அழிசிக்குடி, கிளாவடிநத்தம், பூதவராயன்பேட்டை, வண்டுராயன்பட்டு, தெற்குத்திட்டை, வடக்குத்திட்டை உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்தவர்கள் மனு அளித்தனர். முகாமில் வருவாய் ஆய்வாளர் ஆனந்தி, கிருஷ்ணகுமார், பாஸ்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உமா மகேஸ்வரி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை