உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலோர பாதுகாப்பு ஒத்திகை; இரு இடங்களில் ஊடுருவல் முறியடிப்பு

கடலோர பாதுகாப்பு ஒத்திகை; இரு இடங்களில் ஊடுருவல் முறியடிப்பு

கடலுார்: கடலூர் மாவட்ட கடலோர பாதுகாப்பு படை சார்பில், கடல் மார்க்கமாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் வகையில் 'சாகர் கவாச்' பாதுகாப்பு ஒத்திகை கூட்டு பயிற்சி நேற்று நடந்தது. 'ரெட் போர்ஸ்' குழுவைச் சேர்ந்த போலீசார் சாதாரண உடையில் தீவிரவாதிகள் போல் கடல் வழியாக ஊடுருவ முயற்சி செய்வார்கள். இவர்களை ஊருக்குள் நுழையாமல் தடுக்க சாகர் கவாச் ஒத்திகை நடத்தபடுகிறது. அந்த வகையில் கடலுாரில் நேற்று சாகர் கவாஜ் ஒத்திகை நடத்தப்பட்டது. அதிகாலை 5:00 மணியளவில, கடலோர பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் பத்மா தலைமையில் எஸ்.ஐ.,க்கள் கதிரவன், பிரபாகரன் மற்றும் போலீசார் கடலூர் முதுநகர் அடுத்த ராசாபேட்டை கடல் பகுதியில், சந்தேகப்படும்படியாக படகில் வந்த 6 நபர்களை சுற்றி வளைத்தனர். அவர்களிடம் இருந்து நான்கு போலி வெடிகுண்டுகள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் அவர்கள் தீவிரவாதிகள் போல் சாதாரண உடையில் வந்த போலீசார் என, தெரிந்தது. அவர்கள் கடலூர் துறைமுகம் சிப்காட்டில் தனியார் நிறுவனத்தில் நுழைவதை இலக்காக வைத்திருந்தது தெரிய வந்தது.அதே போன்று, கடலுார் பாதுகாப்பு படையினர் புதுச்சேரி மூர்த்திகுப்பம் கடல் பகுதியில் சந்தேகப்படும் படியாக படகில் வந்த 6 பேரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தியதில், சாதாரண உடையில் தீவிரவாதிகள் போல் புதுச்சேரியில் நுழைந்து சதி வேலையில் ஈடுபட இருந்த போலீசார் என தெரிய வந்தது. கடலுாரில் நடந்த சாகர் கவாச் கடலோர பாதுகாப்பு ஒத்திகையின் போது இரு இடங்களில் தீவிரவாதிகள் ஊடுறுவலை தடுத்த சம்பவத்தால் போலீசார் இடையே மகிழ்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை