உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மக்கள் குறைகளை தீர்க்க முன்னுரிமை கலெக்டர் சிபி ஆதித்ய செந்தில்குமார் பேட்டி

மக்கள் குறைகளை தீர்க்க முன்னுரிமை கலெக்டர் சிபி ஆதித்ய செந்தில்குமார் பேட்டி

கடலுார்: மாவட்ட மக்களின் குறைகளை தீர்ப்பதற்கு அதிக முன்னுரிமை கொடுப்பேன் என, புதியதாக பொறுப்பேற்ற கலெக்டர் சிபி ஆதித்ய செந்தில்குமார் கூறினார்.கடலுார் மாவட்ட கலெக்டராக பணிபுரிந்த அருண் தம்புராஜ், சுகாதாரத்துறை திட்ட இயக்குனராக மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக நிதித்துறை துணை செயலாளராக இருந்து வந்த சிபி ஆதித்ய செந்தில்குமார் கடலுார் மாவட்ட காலெக்டராக நியமிக்கப்பட்டார். நேற்று அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.அவர் நிருபர்களிடம் கூறியதாவது:வரலாற்று சிறப்பு மிக்க கடலுார் மாவட்டத்தில் 141வது கலெக்டராக பதவி ஏற்பது மகிழ்ச்சியாக உள்ளது.இம்மாவட்ட மக்களின் குறைகளை தீர்ப்பதற்கு அதிக முன்னுரிமை கொடுப்பேன். தமிழக அரசின் திட்டங்களை ஏழை, எளிய மக்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுப்பேன். அடிப்படை கட்டமைப்பு வசதி, கல்வி சுகாதாரம் மற்றும் மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் மேம்படுத்த அனைவருடன் ஒருங்கிணைத்து மாவட்ட நிர்வாகம் செயல்படும். இவ்வாறு கலெக்டர் கூறினார். அதைத்தொடர்ந்து அதிகாரிகள் கலெக்டரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை