| ADDED : ஆக 05, 2024 12:19 AM
கடலுார்: கொள்ளிடம் ஆற்றின் கரையோர பகுதிகளில் வெள்ள அபாய தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அன்சூல் மிஸ்ரா, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு செய்தனர்.தென்மேற்கு பருவமழையின் காரணமாக காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் உபரிநீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்துவிடபட்டுள்ளது. அதனால் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் மற்றும் அதனைச் சார்ந்ததாழ்வான கிராமப் பகுதிகளில் வெள்ள அபாய தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அன்சூல் மிஸ்ரா, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலையில் நேற்று ஆய்வு செய்தார்.குமராட்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெராம்பட்டு, திட்டுக்காட்டூர் மற்றும் கீழகுண்டலபாடி ஆகிய பகுதிகளில் வெள்ள பாதிப்புகுறித்தும் மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார். திட்டக்காட்டூர் பகுதியில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளபகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடந்த சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் கால்நடை மருத்துவ முகாமை பார்வையிட்டனர்.கீழகுண்டலபாடி பகுதியில் உள்ள புயல் வெள்ள தடுப்பு மையத்தில் பொதுமக்கள் தங்குவதற்கு தேவையான குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும், இம்மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உணவு தயார்செய்து வழங்குவதையும் ஆய்வு செய்தனர்.தொடர்ந்து கொள்ளிடம் ஆற்றின் கரையோர பகுதிகளில் வெள்ள அபாய தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சிதம்பரம் சப் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் முன்னிலையில்; மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தலைமையில் வெள்ள பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடந்தது.