உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கிக் பாக்சிங் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கலெக்டர் பாராட்டு

கிக் பாக்சிங் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கலெக்டர் பாராட்டு

பரங்கிப்பேட்டை: தேசிய அளவில் நடந்த கிக் பாக்சிங் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை, கலெக்டர் அருண் தம்புராஜ் பாராட்டினார்.மேற்கு வங்க மாநிலம் சிலிக்குறியில், தேசிய அளவிலான கிக் பாக்சிங் போட்டி நடந்தது. இப்போட்டியில், கடலுார் மாவட்ட கிக் பாக்சிங் மாணவர்கள், தமிழ்நாடு அமைச்சூர் கிக் பாக்சிங் அணியுடன் இணைந்து, தமிழகம் சார்பாக விளையாடினர். போட்டியில், கடலுார் மாவட்ட வீரர்கள் சுபாஷினி, அக்சையா, எழில் பாத்திமா, நந்தினி, நவீன்குமார் ஆகியோர் முதல் பரிசும், ஹரிஷ்வரன், முகுந்தன், ஆதிர சகானா ஆகியோர் இரண்டு மற்றும் மூன்றாம் பரிசுகள் பெற்றனர்.சாதனை படைத்த மாணவர்களை, கலெக்டர் அருண் தம்புராஜ் பாராட்டினார்.நிகழ்ச்சியில், கடலூர் மாவட்ட வீறு கிக் பாக்சிங் சங்க தலைவர் சென்சாய் ரங்கநாதன், செயலாளர் சத்யராஜ், பிரதியுனன் ரவிக்குமார் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை