உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சி.பி.எஸ்.இ., தேர்வில் தொடர் சாதனை; வள்ளி விலாஸ் ஆலயா பள்ளி முதன்மை

சி.பி.எஸ்.இ., தேர்வில் தொடர் சாதனை; வள்ளி விலாஸ் ஆலயா பள்ளி முதன்மை

நெல்லிக்குப்பம் அடுத்த வாழப்பட்டு ஸ்ரீவள்ளி விலாஸ் ஆலயா சி.பி.எஸ்.இ.பள்ளி தரமான கல்வி வழங்குவதில் முதன்மையானதாக உள்ளது என, பள்ளி தாளாளர் சீனிவாசன், செயலாளர் இந்துமதி சீனிவாசன் கூறினர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:தரமான கல்வி வழங்குவதில் பள்ளி முதன்மையாக உள்ளது. 2023-24ம் கல்வியாண்டில் சி.பி.எஸ்.இ., பொதுத் தேர்வில் கணித பாடத்தில் 477 மதிப்பெண் பெற்று கடலுாரிலேயே முதலிடம் பிடித்துள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 473 மதிப்பெண், பிளஸ் 2 தேர்வில் 477 மதிப்பெண் பெற்று மாணவர்கள் சாதனை படைத்தனர். பத்தாம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் சதவீதம் 82.64 மற்றும் பிளஸ் 2 தேர்வில் மாணவர்களின் மதிப்பெண் தேர்ச்சி சதவீதம் 85.89 ஆகும்.கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து சி.பி.எஸ்.இ., பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை பள்ளி படைத்துள்ளது. அறிவியல், கணினி, கணிதம் போன்ற பாடங்களுக்கு தனித்தனி ஆய்வுக் கூடம் உள்ளது. ஆங்கிலம் மற்றும் அறிவியல் தொடர்பான போட்டிகள், எழுத்து பயிற்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.நவீன வசதிகளுடன் கூடிய ஆய்வகங்கள், ஸ்மார்ட் வகுப்பறை உள்ளது. அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களால் சிறந்த கல்வி பயிற்சி அளிக்கப்படுகிறது. யோகா, தியானம், கராத்தே, சிலம்பம், பரதநாட்டியம், கீ போர்டு, டிரம்ஸ், செஸ், இசை, கலை மற்றும் கைவினை பயிற்சி வகுப்பு உள்ளது.தற்போது, மழலையர் வகுப்பு முதல், பிளஸ் 1 வரை மாணவர் சேர்க்கை நடக்கிறது. இந்தாண்டு மாணவர் சேர்க்கை கட்டணத்தில் 50 சதவீதம் சலுகையும், பிளஸ் 1 வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தில் சிறப்பு சலுகையும் அளிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை