உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நுகர்பொருள் வாணிபக் கழக தொழிலாளர்கள் வாயிற் கூட்டம்

நுகர்பொருள் வாணிபக் கழக தொழிலாளர்கள் வாயிற் கூட்டம்

கடலுார்: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொதுத் தொழிலாளர் சங்கம் (சி.ஐ.டி.யூ.,) சார்பில் கோரிக்கை விளக்க வாயிற் கூட்டம் நடந்தது.கடலுார் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல தலைவர் இளங்கோ தலைமை தாங்கினார்.நிர்வாகிகள் ராஜமுருகன், சங்கர், தினகரன் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் புவனேஸ்வரன், சி.ஐ.டி.யூ., மாவட்ட தலைவர் கருப்பையன், மாவட்ட செயலாளர் பழனி வேல், மண்டல செயலாளர் சுதர்சன்பாபு சிறப்புரையாற்றினர். இதில், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண் டும். பழுதடைந்த மண்டல மேலாளர் அலுவலகத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.நிர்வாகிகள் பீமாராவ்பாபுஜி, பிரபாகரன், செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். மண்டல பொருளாளர் கலைவாணன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை