உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பூவராகசுவாமி கோவிலில் காணிக்கை எண்ணும் பணி

பூவராகசுவாமி கோவிலில் காணிக்கை எண்ணும் பணி

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோவிலில் உண்டியலை திறந்து காணிக்கை எண்ணும் பணி நடந்தது.ஸ்ரீமுஷ்ணத்தில் பிரசித்தி பெற்ற பூவராக சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் உண்டியலை திறந்து காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது.இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் சந்திரன், ஆய்வாளர் சுபாஷினி, செயல் அலுவலர் கருணாகரன் ஆகியோர் தலைமையில் காணிக்கை எண்ணப்பட்டது.இதில், 7 லட்சத்து 43 ஆயிரத்து 735 ரூபாய் காணிக்கை இருந்தது. மூர்த்தி மற்றும் கோவில் சிப்பந்திகள், ஸ்ரீ முஷ்ணம் ஜெ.பி., பாரா மெடிக்கல் கல்லுாரி மாணவ, மாணவியர், தன்னார் வலர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை