உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விஷ ஜந்துக்கள் புகலிடமான கடலுார் விளையாட்டு பூங்கா

விஷ ஜந்துக்கள் புகலிடமான கடலுார் விளையாட்டு பூங்கா

கடலுார் திருப்பாதிரிப்புலியூர் கேசவன் நகரில் ஏராளமான குடியிருப்புகளில் பொதுமக்கள் வசிக்கின்றனர்.இங்குள்ள சிறுவர்கள் விளையாடுவதற்கு 2020-21ம் ஆண்டு 15வது நிதிக்குழு திட்டத்தில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்கா கடந்த சில ஆண்டுகளாக திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது.இதனால், பூங்காவை பயன்படுத்த முடியாமல் சிறுவர்கள் தவித்து வருகின்றனர்.மேலும், பூங்கா முழுவதும் புதர்கள் மண்டியும், விளையாட்டு உபகரணங்களில் செடி, கொடிகள் படர்ந்தும் வீணாகியுள்ளது. தற்போதியை நிலையில், விஷ ஜந்துக்கள் புகலிடமாக மாறியுள்ளது.எனவே, கேசவன் நகர் சிறுவர் பூங்காவை பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ