உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இயந்திரம் பழுது சாலை பணி பாதிப்பு

இயந்திரம் பழுது சாலை பணி பாதிப்பு

கடலுார்: கடலுார் அண்ணா பாலத்தில் தார் சாலை சுரண்டும் இயந்திரம் பழுதாகி நின்றதால் சாலை பணி பாதித்தது.மத்திய அரசு நெடுஞ்சாலைத் துறை நகாய் சார்பில் விழுப்புரம் - நாகை நான்கு வழிச்சாலை பணிகள் நடக்கிறது. இந்த வழித்தடத்தில் வளவனுார்- சிதம்பரம் அடுத்த வேளக்குடி இடையே பழுதடைந்த 19.96 கி.மீ., துாரத்திற்கு தார் சாலை அமைக்க 36.96 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடக்கிறது. முதல் கட்டமாக முள்ளோடையில் இருந்து கடலுார் அடுத்த குடிகாடு வரை சாலை அமைக்கப்படுகிறது.இதற்காக நேற்று முன்தினம் கடலுாரில் அண்ணா பாலத்தில் தார் சாலை அமைக்க பணிகள் துவங்கியது. அதில் ராட்சஷ இயந்திரம் மூலம் சாலையில் தார் சாலையை சுரண்டும் பணி நடந்தது.அப்போது அண்ணா பாலத்தில் ராட்சஷ இயந்திரம் தார் சாலையை சுரண்டி எடுக்கும் போது, பாலத்தின் இணைப்பு பகுதியில் உள்ள இரும்பு பட்டை இயந்திரத்தில் சிக்கியது. இதனால் தார் சாலையை சுரண்டும் ராட்சஷ இயந்திரம் பழுதாகி நின்றது. இதனால் பணி பாதித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ