உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம்

ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம்

வடலுார்: வடலுார் புதுநகர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் அரசுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த இரண்டு வீடுகள் இடித்து அகற்றப்பட்டது.வடலூர் புதுநகர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் வருவாய் துறைக்கு சொந்தமான இடத்தில் சண்முகம் 40; பூரணி 35; இருவரும் ஆக்கிரமித்து வீடுகள் கட்டி பல ஆண்டுகளாக வசித்து வந்தனர். இந்தஆக்கிரமிப்பு வீடுகளை காலி செய்யுமாறு வருவாய்துறையினர் நோட்டீஸ் அனுப்பினர். வருவாய்துறை சார்பில் அவர்வகளுக்கு அரங்கமங்கலம் கிராமத்தில் மாற்று இடம் வழங்கப்பட்டது. ஆனால், இடத்தை காலி செய்யாததால் வருவாய்துறையினர் இடித்து அப்புறப்படுத்த முடிவு செய்தனர்.நேற்று தாசில்தார் அசோகன் தலைமையில் மண்டல துணை தாசில்தார் சிவசக்திவேல் உள்ளிட்ட வருவாய்துறையினர் ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் இருந்த வீடுகளை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றினர். வடலூர் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு ) சந்திரன் தலைமையில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை