உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மா.கம்யூ., அலுவலகம் தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மா.கம்யூ., அலுவலகம் தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சிதம்பரம் : நெல்லையில் மா.கம்யூ., கட்சி அலுவலகம் தாக்கப்பட்டதை கண்டித்து சிதம்பரம் மற்றும் திட்டக்குடியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மா.கம்யூ., கட்சி சார்பில், நெல்லையில், சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்ததால், மா.கம்யூ., கட்சி அலுவலகத்தை சூறையாடியவர்களை கண்டித்தும், அவர்களை கைது செய்திட வலியுறுத்தியும் சிதம்பரம் கஞ்சித்தொட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, நகர செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர் ரமேஷ்பாபு, முன்னாள் மாநில குழு உறுப்பினர் மூசா பங்கேற்று பேசினர்.மாவட்ட குழு உறுப்பினர் ஜெயசித்ரா, நகர்மன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன், மாதர் சங்க மாவட்ட தலைவர் மல்லிகா, நகர்மன்ற உறுப்பினர் தஸ்லிமா, மாதர் சங்க நகர தலைவர் அமுதா, நகர்குழு உறுப்பினர் சங்கமேஸ்வரன், மாணவர் சங்க மாநில குழு உறுப்பினர் குமரவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

திட்டக்குடி

திட்டக்குடியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மா.கம்யூ., வட்டசெயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், வட்டக்குழு உறுப்பினர்கள் வரதன், மாணிக்கவேல், மாயவன் முன்னிலை வகித்தனர்.விவசாய சங்க நிர்வாகி மகாலிங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க வட்டசெயலாளர் சந்தோஷ், மாதர்சங்க வட்டத்தலைவர் சுமதி, வட்டசெயலாளர் முத்துலட்சுமி மற்றும் கட்சியினர் பங்கேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை