உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சுத்துக்குளம் கோவிலில் 31ம் தேதி தீமிதி விழா

சுத்துக்குளம் கோவிலில் 31ம் தேதி தீமிதி விழா

கடலுார்: கடலுார் துறைமுகம் சுத்துக்குளம் சிற்றம்பல ஐயனார் மற்றும் திரவுபதி அம்மன் கோவிலில், வரும் 31ம் தேதி தீமிதி திருவிழா நடக்கிறது.விழாவையொட்டி, நாளை (25ம் தேதி) மாலை 6:00 மணிக்கு பகாசூரனுக்கு அன்னம் அளித்தல், 26ம் தேதி திரவுபதி அம்மனுக்கு திருக்கல்யாணம் மற்றும் இரவு மின் அலங்காரத்தில் சாமி வீதியுலா நடக்கிறது. 28ம் தேதி காலை அர்ஜூனன் தபசு, 29ம் தேதி காலை வீராட பருவம் மாடு பிடி சண்டை உற்சவம் நடக்கிறது. தொடர்ந்து, 30ம் தேதி மாலை 6:00 மணிக்கு தீமிதி விழா நடக்கிறது.ஜூன் 1ம் தேதி மாலை தர்மர் பட்டாபிேஷகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !