உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / புற்றுமாரியம்மன் கோவிலில் 27ம் தேதி தீமிதி உற்சவம் 

புற்றுமாரியம்மன் கோவிலில் 27ம் தேதி தீமிதி உற்சவம் 

கிள்ளை: கிள்ளை அடுத்த தில்லைவிடங்கன் கிராமத்தில் உள்ள ஆதிகாளி, புற்றுமாரியம்மன் கோவிலில் வரும் 27ம் தேதி தீமிதி உற்சவம் நடக்கிறது.அதையொட்டி, கடந்த 17ம் தேதி கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து, ஆதிகாளி மற்றும் புற்றுமாரியம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்து வருகிறது. முக்கிய விழாவான தீமிதி திருவிழா வரும் 27ம் தேதி காலை சக்தி கரகம், பால்குடம் எடுத்தல் மாலை 5:00 மணிக்கு தீமிதி திருவிழா நடக்கிறது. 28ம் தேதி மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. ஏற்பாடுகளை, கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி