சிதம்பரம் : ஆன்மிக நகரமான சிதம்பரத்தை கஞ்சா நகரமாக மாற்றியதுதான் திராவிட மாடல் தி.மு.க, அரசின் சாதனை என, பாண்டியன் எம்.எல்.ஏ., பேசினார்.சிதம்பரம் தொகுதி அதி.மு.க., வேட்பாளர் சந்திரகாசனுக்கு ஆதரவாக நேற்று இறுதிகட்ட பிரசாரம் தீவிரமாக நடந்தது. சிதம்பரம் மேல வீதியில் நடந்த இறுதிகட்ட பிரசாரத்தில் தொகுதி பொறுப்பாளர் செம்மலை, பாண்டியன் எம்.எல்.ஏ., அமைப்புச் செயலாளர் முருகுமாறன் ஆகியோர் பேசினர்.பாண்டியன் எம்.எல்.ஏ., பேசுகையில், அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை தி.மு.க., அரசு முடக்கியுள்ளது. ஆன்மிக நகரமாக இருந்த சிதம்பரத்தை கஞ்சா நகரமாக மாற்றியதுதான் திராவிட மாடல் தி.மு.க., வின் சாதனை. தி.மு.க., வை சேர்ந்த ஜாபர் சாதிக் 5000 கோடிக்கு போதை பொருள் கடத்தல்தான் தி.மு.க., அரசின் சாதனை.எனவே, இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டளித்தால் மட்டுமே, சிதம்பரம் நகரத்தை ஆன்மிக நகரமாக மாற்ற முடியும் என்றார்.நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், ஜெ., பேரவை துணை செயலாளர் பாலமுருகன், மாவட்ட அவைத்தலைவர் குமார் ,பொருளாளர் தோப்பு சுந்தர், நகர செயலாளர் செந்தில்குமார், பாசறை செயலாளர் டேங்க் சண்முகம், இலக்கிய அணி செயலாளர் தில்லை கோபி, நகர பேரவை செயலாளர் சுரேஷ் பாபு ,ஒன்றிய செயலாளர்கள் சுந்தரமூர்த்தி, அசோகன், நகர செயலாளர்கள் மாரிமுத்து, தமிழரசன், தே.மு.தி.க., மாவட்ட செயலாளர் உமாநாத், மாவட்ட அவைத் தலைவர் பாலு, துணை செயலாளர் பானுச்சந்தர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.