| ADDED : மே 07, 2024 04:07 AM
விருத்தாசலம் : 'தோல்வி என்பது சிறு தடங்கல்தான், உங்கள் கல்வியை எந்த விதத்திலும் பாதிக்காது' என, டாக்டர் சங்கவி முருகதாஸ் ஆலோசனை கூறினார்.விருத்தாசலம் நகர்மன்ற தலைவரான அவர் கூறியது:பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் துவண்டு விடாதீர்கள். உங்கள் இலக்கின் பயணத்தில் இது சிறு தடங்கல் தான். இது உங்களை சீர்படுத்திக் கொள்ள உதவும். வெற்றி பெற்றவர்களை விட, நீங்கள் எந்த விதத்திலும் தாழ்ந்தவர்கள் இல்லை என்பதை உணருங்கள்.தோல்வியடைந்த பாடத்தை புரிந்து கொள்ள உங்களுக்கு நிறைய காலம் இருக்கிறது. கவனமாக படியுங்கள். எதனால் தோல்வி அடைந்தோம் என்பதை நினைத்து, அந்த இடையூறுகளை துாக்கி வீசுங்கள். தோல்வியடைந்த பாடத்தை உங்களுக்கு பிடித்த சப்ஜெக்டாக மாற்றிக் கொள்ளுங்கள்.உங்கள் ஆசிரியர்கள் துணை கொண்டு, அவர்களிடம் தயங்காமல் கேட்டு, மனப்பாடம் செய்யாமல், புரிந்து கொண்டு படியுங்கள். அடிக்கடி மறந்து போகும் பாடத்தை எழுதிப் பழகுங்கள். கனவுகளுடன் முயற்சி செய்பவர்களுக்கு வெற்றி வந்தே தீரும்.இவ்வாறு அவர் கூறினார்.