உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வாக்காளர் பட்டியலில் குளறுபடி அடிக்கடி சிறப்பு முகாம்கள் நடத்தியும் கோட்டை விட்டுட்டாங்க...

வாக்காளர் பட்டியலில் குளறுபடி அடிக்கடி சிறப்பு முகாம்கள் நடத்தியும் கோட்டை விட்டுட்டாங்க...

தேர்தல் அறிவிப்பிற்கு முன்பிருந்தே, மாவட்ட வருவாய் துறையினர், வாக்காளர் சேர்ப்பு மற்றும் நீக்கம் உள்ளிட்ட பணிகளை செய்வர். ஆண்டுக்கு 4 முறை சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. இப்பணியின்போது வீடு வீடாக சென்று, புதிய வாக்காளர்கள் சேர்த்தல், ஊரில் இல்லாமல் போனவர்கள், இடம் பெயர்ந்தவர்கள், இறந்தவர்கள் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, பட்டியல் திருத்தம் செய்யப்படுகிறது.மாவட்டம் தோறும் அதற்கென உள்ள தேர்தல் பிரிவு அலுவலர்கள், கம்யூட்டரில் அப்டேப் செய்து, இறுதி பட்டியலிட்டு, கலெக்டர் தலைமையில், அரசியல் கட்சியினர் முன்னிலையில் வெளியிடப்படுகிறது.கடலுார் மாவட்டத்தில் இத்தனை நிலைகளை கடந்தும். நடந்து முடிந்த எம்.பி., தேர்தலில், வாக்காளர் பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளது.மாவட்டம் முழுவதும், பல வாக்காளர்களின் பெயர்கள் கொத்து, கொத்தாக மிஸ்சிங் ஆகியது. இவர்கள் வாக்குச்சாவடி வரை சென்று ஓட்டுப்போட முடியாமல் திரும்பினர். அதே சமயத்தில் இறந்தவர்கள் பெயர்கள் நீக்கப்படாமல், அவர்களின் பெயரில் பூத் சிலிப் வழங்கப்பட்டது. குறிப்பாக, காட்டுமன்னார்கோவில், நெல்லிக்குப்பம் உள்ளிட்ட பல பகுதிகளில் இறந்தவர்களுக்கு பூத் சிலில் வழங்கப்பட்டது.இதனால், தேர்தல் முடிந்த பிறகு ஓட்டுப்பதிவு சதவீதத்தை துள்ளியமாக கணக்கிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. சிதம்பரம் தொகுதியில் ஓட்டுப்பதிவு சதவீதம் மூன்று முறை மாற்றப்பட்டது. கிராமங்கள் தோறும் நியமிக்கப்பட்ட டி.எல்.ஓ.,க்கள் முறையாக விசாரிக்காதது, அவர்களின் பொறுப்பு அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக கூறப்படுகிறது.எனவே, வரும் சட்டசபை தேர்தலில் இதுபோன்று குழப்பங்களை தவிர்க்க, வாக்காளர்கள் சேர்த்தல், நீக்கல் பணிகளை துள்ளியமாக மேற்கொண்டு, குறைபாடுகளை சரி செய்ய வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை